சபரிமலை பயணம்.. கொடைக்கானலில் மொடாக்குடி.. தகராறில் இரத்த வெள்ளத்தில் மர்ம மரணம்.. சிறுவன் பரபரப்பு வாக்குமூலம்.!

சபரிமலை பயணம்.. கொடைக்கானலில் மொடாக்குடி.. தகராறில் இரத்த வெள்ளத்தில் மர்ம மரணம்.. சிறுவன் பரபரப்பு வாக்குமூலம்.!



Andra Pradesh Sabarimala Yathries Kodaikanal Dindigul Murder Police Investigation

சபரிமலை சென்ற நபர்கள், கொடைக்கானலில் அறையெடுத்து குடித்தபோது வந்த தகராறில் ஒருவர் மர்ம மரணமடைந்தார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் நாராயண ரெட்டி, ரவி, கிஷோர், சுனில், கேசவலு, ரவி புக்யா, மஞ்சுநாத் மற்றும் நாகராஜு. நாகராஜுவின் மகன் சரண் சாய் (வயது 11). இவர்கள் 9 பேரும் இன்னோவா காரில் கடந்த டிச. 09 ஆம் தேதி ஆந்திர பிரதேசத்தில் இருந்து சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளனர். யாத்திரையை முடித்துவிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு டிச. 11 ஆம் தேதி வருகை தந்துள்ளனர். 

அன்றைய நாளின் இரவை கலையரங்கம் அருகேயுள்ள தனியார் தங்கும் விடுதியில் கடத்திய நிலையில், ஓட்டுநர் மற்றும் சிறுவன் சரண் சாய் தவிர்த்துள்ள அனைவரும் மதுபானம் அருந்தியிருக்கின்றனர். அதிக போதையில் நாகராஜுக்கும் - நண்பர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில், நாகராஜுக்கு வயிற்றுப்பகுதி மற்றும் வாயில் காயம் ஏற்பட்டு, அறை முழுவதும் இரத்த வெள்ளத்தில் நிரம்பியிருந்ததாக தெரியவருகிறது.

Andra Pradesh

மறுநாள் அவசர அவசரமாக கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு ஆந்திரா செல்ல தொடங்கிய நிலையில், திண்டுக்கல் அருகே நகராஜு மயக்கம் அடைந்து இருக்கிறார். உடனடியாக, அவரை அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கவே, நகராஜூவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியும் அறிவுறுத்தி இருக்கின்றனர். 

மருத்துவர்களின் கூற்றினை கண்டுகொள்ளாத அனைவரும், நாகராஜுவின் உடலை பின் இருக்கையில் படுக்கவைத்து ஆந்திர பிரதேசம் நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர். இவர்களின் வாகனம் வேடசந்தூர் கல்வார்பட்டி சோதனை சாவடி அருகே வந்த நிலையில், காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாகனத்தையும் நிறுத்திய அதிகாரிகள், படுக்க வைக்கப்பட்ட நிலையில் இருந்த நகராஜுவின் உடலை பார்த்து விசாரணை செய்துள்ளனர். 

Andra Pradesh

காருக்குள் இருந்த நகராஜுவின் மகன் சரண் சாய், தனது தந்தையை மதுபோதையில் நாராயண ரெட்டி, கேசவலு, ரவி கிஷோர் தாக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நாகராஜூவை சோதனை செய்த அதிகாரிகள், அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்யவே, அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், திண்டுக்கல் எஸ்.பி தலைமையிலான காவல் துறையினர் சிறுவன் உட்பட 8 பேரையும் அழைத்து கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். கொடைக்கானல் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் அதிகளவு மதுபானம் குடித்ததால் இரத்த குழாய் மற்றும் உணவுக்குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக நாகராஜ் இறந்துவிட்டதாக முடிவு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

Andra Pradesh

இதனால் சிறுவன் உட்பட 8 பேரும் விடுவிக்கப்ட்டுள்ள நிலையில், நாகராஜ் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விசாரணை மீண்டும் துரிதப்படுத்தப்பட்டு நடந்து வருகிறது.