எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போலவே துக்கமாக உள்ளேன்.! இனி எந்த குழந்தைக்கும் நடந்துவிடக்கூடாது.! அமைச்சர் அன்பில் மகேஷ்

எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போலவே துக்கமாக உள்ளேன்.! இனி எந்த குழந்தைக்கும் நடந்துவிடக்கூடாது.! அமைச்சர் அன்பில் மகேஷ்



anbil mahesh talk about student death

கோவையில் தனியார் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தலைமை  ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்தநிலையில், கோவைக்கு சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த இழப்பு தனிப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட இழப்பு என்று பார்க்காமல், எனது சொந்த மகள் இந்த நிலைமைக்கு ஆளாகி இருந்தால் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பேனோ அந்த விதத்தில் மிகவும் துக்ககரமான நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளேன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் இதற்கான நீதி விசாரணை சரியான முறையில் நடத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். 

இதற்கு காரணமான ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாயப்பட்டிருக்கிறது. பெற்றோருக்கும், உறவினருக்குமான கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை. அரசு பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்து பயிற்சி அளித்திருக்கிறோம். இதுபோன்று, போக்சா சட்டம் குறித்து தனியார் பள்ளிகளுக்கும் சென்றடைய வேண்டும். இது போன்ற நிகழ்வு இனி எந்த குழந்தைக்கும் நடந்துவிடக்கூடாது என அந்த மாணவியின் தாயார் கூறியதாக தெரிவித்தார்.