திடீர் உடல்நலக்குறைவால் அப்பல்லோவில் அன்பழகன் அனுமதி!

திடீர் உடல்நலக்குறைவால் அப்பல்லோவில் அன்பழகன் அனுமதி!


anbalagan-in-apollo-hospital

திமுகவின் பொதுச்செயலாளரும் மறைந்த கலைஞரின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் மூத்த தலைவராக இருந்து வருபவர் பேராசிரியர் அன்பழகன். இவர் கலைஞரின் ஆரம்ப காலத்திலிருந்து அவருடன் நெருக்கமாக இருந்தவர். கலைஞரை விட மூத்தவரான இவர் திமுகவின் பொதுச் செயலாளராக இன்றுவரை இருந்து வருகிறார்.

anbalagan in apollo hospital

இந்நிலையில் இவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அன்பழகன். 

திமுக தலைவர் முக ஸ்டாலின், ஆ. ராசா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். மருத்துவர்களிடம் க. அன்பழகனின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார். 

anbalagan in apollo hospitalஏற்கனவே தலைவர் கலைஞரை இழந்து வாடும் திமுக தொண்டர்கள் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உள்ளனர்.