கணவரின் தலையில் கலைப்போட்டு கொலை செய்த மனைவி; குடும்பத்தலைவனின் கள்ளக்காதல் பழக்கத்தால் நடந்த விபரீதம்.!

கணவரின் தலையில் கலைப்போட்டு கொலை செய்த மனைவி; குடும்பத்தலைவனின் கள்ளக்காதல் பழக்கத்தால் நடந்த விபரீதம்.!


AMMK Supporter Madurai Killed by Wife

 

அமமுக பிரமுகர் அவரின் மனைவியால் வெட்டி கொல்லப்பட்டார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் சர்க்கரை (வயது 51). இவரது மனைவி அன்னலட்சுமி. தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். 

சர்க்கரை ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வந்துள்ளார். அமமுகவில் கட்சியில் பகுதி செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், சர்க்கரைக்கும்-பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், கணவன்-மனைவியிடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

ammk

நேற்று இரவு கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த சர்க்கரையின் தலையில் அன்னலட்சுமி கல்லை போட்டு உடலில் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் சர்க்கரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக அன்னலட்சுமியை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சர்க்கரையின் தவறான பழக்கத்தை கைவிடாத காரணத்தால் கொலை நடந்தது அம்பலமானது.