இனிப்பு வழங்கி கொண்டாடும் அ.ம.மு.க-வினர்! காரணம் என்ன தெரியும? - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம்

இனிப்பு வழங்கி கொண்டாடும் அ.ம.மு.க-வினர்! காரணம் என்ன தெரியும?


அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்ட பிறகு, டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனிக் கட்சி தொடங்கினர். ஆனால் அந்த கட்சி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாததால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சியால் போட்டியிடமுடியவில்லை. இதனால்,  அமமுகவைச் சேர்ந்தவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். 

இந்நிலையில், அமமுக, இந்தியத்தேர்தல் ஆணையத்தில் நேற்று முன்தினம் கட்சியாகப் பதிவு செய்தது. அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரிதும் கொண்டாடி வருகிறார்கள். 


அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பதிவு செய்ததை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கட்சி நிர்வாகிகள் இனிப்பு  வழங்கி கொண்டாடினர்.

மேலும், உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி அளித்ததை முன்னிட்டு இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  சார்பாக  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இனிப்புகள் வழங்கப்பட்டது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo