குக்கர் மக்கர் ஆனதால தீயாய் பரவும் டிடிவி தினகரனின் பரிசு பெட்டி.! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம்

குக்கர் மக்கர் ஆனதால தீயாய் பரவும் டிடிவி தினகரனின் பரிசு பெட்டி.!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. அணைத்து கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் அமமுக-விற்கு  குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் சார்பில் கோரப்பட்டது.  அமமுக ஒரு கட்சியாக இதுவரை பதிவாகவில்லை என்பதால் அமமுக-விற்கு பொதுச் சின்னம் ஒதுக்குவது என்பது இயலாத காரியம் என தேர்தல் ஆணையம் கூறியது. 

ttv cooker க்கான பட முடிவு

இதனையடுத்து உச்சநீதிமன்றம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் தோ்தல் ஆணையம் அமமுக-விற்கு பொதுச் சின்னம் வழங்கியுள்ளது. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். 

சின்னம் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அது சமூகவலைதளங்களில் வைரலாக தொடங்கியது. அமமுக மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் பலரும் இந்த தகவலை சமூகவலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர். இதன் காரணமாக அறிவிப்பு வெளியான சில சிமிடங்களில் #பரிசிப்_பெட்டி #GiftBox போன்ற ஹேஷ்டேகுகள் உருவாக்கப்பட்டு அவை இந்தியளவில் வைரல் ஆகி வருகின்றன. 

தற்போது இதை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, அமமுக போட்டியிடும் தொகுதிகளில் அதன் ஆதரவாளர்கள் பரிசுப் பெட்டி சின்னத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. அது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo