இபிஎஸ் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. கோபியில் சோகம்.!



AIADMK Supporter Dies After Collapse at Edappadi Palaniswami’s Campaign Rally in Gobichettipalayam

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்தில் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின்போது 43 வயது ஆதரவாளர் அர்ஜுனன் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அதிமுகவில் தற்போது நிலவி வரும் உட்கட்சி பிரச்சனைகளுக்கு இடையே ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பரப்புரை பயணத்தில் ஈடுபட்டார். கொங்கு மண்டலத்தில் நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய அதிமுக நிர்வாகிகளாக அறியப்படும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பறிபோன உயிர்:

இந்த பரபரப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெறும் தேர்தல் பரப்புரை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில் பங்கேற்க வந்த 43 வயதான அர்ஜுனன் என்ற நபர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்ய அழைத்துச் சென்ற நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்டரின் மரணத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்: