வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
விஜய பிரபாகரனுக்கு பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம்: ராஜேந்திர பாலாஜி உறுதி.!
ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள 2024 மக்களவை பொதுத்தேர்தலில், அதிமுக - தேமுதிக கூட்டணி சார்பில், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் மக்களவை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார்.
அவர் தற்போது தேமுதிக-அதிமுக கட்சியினருடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார். இந்நிலையில், இன்று விஜயப்ரபாகரன் மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்தார். அச்சமயம், செய்தியாளர்கள் சந்திப்பில், அதிமுகவினர் உறுதுணையாக இருக்கிறார்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அச்சமயம் குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜயப்ரபாகரனின் வலப்பக்கம் மற்றும் இடப்பக்கம் என நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம். வேறு யாராலும் எங்களுக்கு ஈடு கொடுக்க இயலாது என பேசினார். இது அங்கிருந்த கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.