அதிமுக பொதுச்செயலாளருக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்... தலைமையகத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!!

அதிமுக பொதுச்செயலாளருக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்... தலைமையகத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!!



AIADMK General Secretary Nomination Filing Begins Today...Security Work Is Intensified At Headquarters...

அதிமுக தலைமையகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது. 

2022  ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அந்த கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. 

மேலும் வேட்புமனு பரிசீலனை 20-ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில், வேட்புமனுக்களை 21-ஆம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும்  அதிமுக தலைமை அலுவலகத்தில், நீதிமன்ற அறிவுறுத்தலின் படி 50 காவல்துறையினர் சுழற்சி முறையில் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதைத் தொடர்ந்து, இன்று வேட்புமனு தாக்கல் தொடங்க இருக்கும் நிலையில் கூடுதல் பாதுகாப்பு கோரி அதிமுக தரப்பில் இருந்து மனு அளிக்கப்பட்டுள்ளதால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.