"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
#Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல்; மருத்துவமனையில் அனுமதி.!
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின்போது, மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் தங்கமணி. தற்போது அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்து வரும் தங்கமணி, தொடர்ந்து தலைமையுடன் ஓயாது பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் இருந்த அமைச்சர் தங்கமணிக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிகிச்சைக்காக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் முன்னாள் அமைச்சருக்கு பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சமீபகாலமாகவே மழைக்காலம் காரணமாக சென்னையில் டெங்கு பரவல் அதிகரித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சருக்கு உறுதி செய்யபட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.