முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தை வறுத்தெடுத்த திமுக அமைச்சர் பொன்முடி.. அனல் பறந்த பேச்சால் வெறியான தொண்டர்கள் .! 

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தை வறுத்தெடுத்த திமுக அமைச்சர் பொன்முடி.. அனல் பறந்த பேச்சால் வெறியான தொண்டர்கள் .! 


AIADMK Former Minister CV Shanmugam Roasted by Minister Ponmudi

திராவிட மாடல் ஆட்சியை முதலவர் வழங்கிவரும் நிலையில், சில முண்டங்கள் தெரியாமல் பேசி வருகிறது என அமைச்சர் காட்டமாக பதில் விமர்சனம் செய்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி கட்சியின் சார்பில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் & தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை கடுமையாக சாடி பேசியிருந்தார். இது திமுக தொண்டர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அமைச்சர் பரபரப்பாக பேசியுள்ளார்.

திமுக அமைச்சர் பொன்முடி பேசுகையில், "அதிமுக கட்சியே இருக்கிறதா? இல்லையா? ன்று தெரியவில்லை. கட்சிக்குள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். எங்கள் மாவட்டத்துக்காரன் சி.வி சண்முகம் தளபதி குறித்து அவதூறாக பேசுகிறான். அவன் முன்னாள் சட்ட மந்திரியா?. 

cv Shanmugam

அவனை மக்கள் மன்னிப்பார்களா?. இதனை நினைத்துப்பார்த்து நாம் நடக்க வேண்டும். அதிமுக கட்சி தமிழகத்தில் மட்டும் இல்லை., எங்குமே கிடையாது. கட்சியே ஒழிந்துவிட்டது. பாஜகவுக்கு அவர்கள் அதிக இடங்களை தேர்தலில் ஒதுக்க வாய்ப்புள்ளது. நான் யாரையும் மரியாதையாக பேசுவேன். அவன் பேசியதை கேட்டு எனக்கே வேகம் வருகிறது. 

திராவிட மாடல் ஆட்சியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கி வருகிறார். இது சில முண்டங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். வரலாறு தெரியாத நாய்களுக்கு தெரியாமல் இருக்கலாம். மதத்தின் பெயரால் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். ஓய்வில்லாமல் உழைக்கும் தலைவர்களாகவும், அமைச்சர்களாவும் நாங்கள் இருக்கிறோம்" என்று பேசினார்.