ஸ்மார்ட் வகுப்பறை பெயரில், ஸ்மார்ட் கொள்ளையடிக்கும் திமுக, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள்?.. பகீர் ரிப்போர்ட் இதோ.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தாமோதரன், தனது தொகுதிக்குட்பட்ட அரசுப்பள்ளியில் நவீன வகுப்புகளை நடத்த ஸ்மார்ட் போர்ட் வசதி செய்து கொடுத்துள்ளார். தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 32 ஸ்மார்ட்போர்டுகளை வாங்கி பள்ளிகளுக்கு கொடுத்துள்ளார்.
இவர் வாங்கிக்கொடுத்த ஸ்மார்ட் போர்டுகள் மதிப்பு ஒன்றுக்கு ரூ.2 இலட்சம் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக ரூ.64 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போர்டு தயாரித்து வழங்கும் நிறுவனம் ரூ.1 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்புக்கு வழங்குகிறது.
எண்ணிக்கை மற்றும் அரசு பணிகளுக்கு ஏற்ப அதன் விலையில் கட்டாயம் மாறுபாடு உண்டு. ரூ.1 இலட்சம் மற்றும் அதற்கு குறைவாகவே அவற்றை கொள்முதல் செய்ய வாய்ப்புகள் அதிகம். ஆனால், ரூ.2 இலட்சம் என ஒரு ஸ்மார்ட்போர்டுக்கு கணக்கு வைத்து ஊழல் செய்துள்ளார்கள்.
இதனைப்போல, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு, சமீபத்தில் 306 ஸ்மார்ட்போர்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. சபாநாயகர் அப்பாவுவின் தொகுதியில் ரூ.7 கோடியே 11 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் இவை வழங்கப்பட்டுள்ளது என கணக்கு கூறப்பட்டுள்ளது.
அவர்களின் தரவுப்படி ஸ்மார்ட்போர்டின் விலை ரூ.2 இலட்சத்து 30 ஆயிரம் என எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதிமுக எம்.எல்.ஏ, திமுக எம்.எல்.ஏ என இரண்டு பேரும் ஸ்மார்ட்போர்ட் வாங்கிய விவகாரத்தில் ஊழலை செய்துள்ளது அப்பட்டமாக உறுதியாகிறது. ஸ்மார்ட்போர்டு விலை ரூ.1 இலட்சத்து 5 ஆயிரம், இன்டர்நெட் கனெக்சன் என எடுத்துக்கொண்டால் மொத்தமாக ஸ்மார்ட்போர்டு ஒன்றுக்கு ரூ.70 ஆயிரம் வரை ஊழல் நடந்துள்ளது.
இவ்வாறாக தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட்போர்டு வாங்கிய கணக்கை எடுத்தால், இதில் பலகோடி ஊழல் நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம். கல்வித்துறையில் பல நலத்திட்டங்களுக்கு கணக்கு காண்பித்து 50% ஊழல் செய்துள்ளார்கள்.
ஆனால், இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சம்பந்தப்பட்ட அதிமுக கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன், "என்னைப்பற்றி வந்துள்ள ஊழல் புகார்கள் பொய்யானவை. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தொகுதி மேம்பாட்டு நிதியை எந்த எம்.எல்.ஏ-வும் தொகையாக பெற இயலாது என்ற நிலையில், ஊழல் எப்படி நடக்கும்?.
ஆட்சியர் அலுவலகம் வாயிலாக டெண்டர் கோரப்பட்டு, ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடைபெறும். இதுவே அரசு நடைமுறை. இதில் என்மீது எந்த தவறும் இல்லை. நான் ஊழல் செய்யவில்லை" என தெரிவித்துள்ளார். அதேபோல, சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு ரூ.3 இலட்சம் செலவு செய்தார்கள்.
நாங்கள் ரூ.1 இலட்சம் குறைத்து அதே வசதியுடன் 2 இலட்சத்திற்கு செய்து தருகிறோம். அரசுக்கு நிதியை சேமிக்கிறோம். ஸ்மார்ட் பாடுகளை வழங்கிய நிறுவனம் பள்ளிக்கு கேமரா உட்பட பல பொருட்களை வாங்கியுள்ளது. ஆக விலை தொடர்பாக எனக்கு தெரியாது. கொள்முதல் விபரம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்டவை" என தெரிவித்தார்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
புகார் தெரிவித்தார்: அசோக் ஸ்ரீநிதி, பாட்டாளி மக்கள் கட்சி.