தமிழகம் லைப் ஸ்டைல் சமூகம்

சுடுகாட்டில் தாயின் சடலத்தின் மீது அமர்ந்த மகன்; அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!!

Summary:

aghori manikandan sitting on his mom deadbody

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரி பயிற்சி பெற்ற மணிகண்டன் என்பவர் நிர்வகித்து வருகிறார். சமீபத்தில் இறந்த இவரது தாயாரின் உடல் அடக்கம் செய்யும் பொழுது அவர் செய்த சம்பவங்கள் ஊர் மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக அகோரிகள் வடமாநிலங்களில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் தான் வாழ்ந்து வருவார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இவர்கள் பெரும்பாலும் காசி பகுதியை மையமாகக் கொண்டு வாழ்ந்து வருவர்.

aghori manikandan trichy க்கான பட முடிவு

அகோரி மணிகண்டன் சில மாதங்களுக்கு முன்பு திருச்சி  அரியமங்கலம் அருகே பாய்ந்தோடும் உய்யங்கொண்டான் வாய்க்கால் கரையில் உள்ள காளி கோவிலில் ஒரு மிக பெரிய அகோரிகள் பூஜையை நடத்தினார். அங்கு கட்டப்பட்டு வந்த அகோர பைரவர் சிலைக்கு பிரிதிஷ்டை செய்திட வட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து அகோரிகளை அழைத்து வந்த மணிகண்டன், இந்த சிறப்பு பூஜையை நடத்தினார்.

அகோரி

இவர் மேலும் இப்பகுதியில் பில்லி சூனியம், பேய் ஓட்டுதல், மாந்திரிக பூஜைகள் வாராவாரம் வெள்ளி, செவ்வாய் தினங்களிலும், அமாவாசை, பௌர்ணமி போன்ற முக்கிய தினங்களிலும் செய்து வருவது வழக்கம். இவர் காசியில் தான் அகோரியாக தீட்சை எடுத்துக்கொண்டதாகக் கூறிக்கொண்டு தனது சீடர்களுடன் இப்பகுதியில் கோயில் கட்டி பூஜைகள் நடத்தி வருகிறார். இவரின் இதுபோன்ற வித்தியாசமான செயல்களால் அப்பகுதி மக்கள் எப்போதும் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், அகோரி மணிகண்டனின் தாயார் மேரி திடீரென மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் அடக்கம் அரியமங்கலம் மத நல்லிணக்க இடுகாட்டில் நடைபெற்றது. முன்னதாக மேரியின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதில் அகோரிகள் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். 

aghori manikandan trichy க்கான பட முடிவு

இடுகாட்டிற்கு சென்றதும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது அகோரி மணிகண்டன் தனது தாயின் உடல் மீது அமர்ந்து, மந்திரங்கள் ஓத பூஜைகள் செய்தார். அவருடன் சக அகோரிகளும் டம்ரா மேளம் முழங்க, சங்கு ஊதி அகோரி பூஜை நடத்தினர். .

இவ்வாறு இறந்தவரின் உடல் மீது அமர்ந்து அஞ்சலி பூஜை நடத்தினால் அவரது ஆன்மா இறைவனை சென்றடையும் என்று விளக்கம் கூறப்பட்டது. இது அகோரிகளின் வழக்கமாகவும் இருந்து வருகிறது. இதையடுத்து மேரியின் உடலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, அடக்கம் செய்தனர். மரணமடைந்த தாயின் உடல் மீது அமர்ந்து அகோரி நடத்திய விசித்திர பூஜையானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement