அடேங்கப்பா... என்ன ஸ்டைலு, மாஸு, ஜாலி.. எம்.ஜி. ஆரின் பாடலுக்கு மூதாட்டி உற்சாக நடனம்.!Aged Lady Dance on Bus MGR Manthopil Song

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், பழம்பெரும் நடிகை சரோஜா, நாகேஷ் உட்பட பலரின் அட்டகாசமான நடிப்பில் கடந்த 1965ல் வெளியான திரைப்படம் எங்க வீட்டு பிள்ளை. சாணக்யாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். 

இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தியால் மேற்கொள்ளப்பட்டது. அதனால் காலங்கள் கடந்தும் படத்தில் உள்ள பாடல்கள் நம் நினைவில் இருக்கிறது. இப்படத்தில் உள்ள மாந்தோப்பில் நான் நின்றிருந்தேன் என்ற பாடல் இன்றளவும் பட்டிதொட்டியெங்கும் பரவி கிடக்கிறது. 

இந்த நிலையில், தனியார் பேருந்தில் எங்க வீட்டு பிள்ளை படத்தில் இருந்து மாந்தோப்பில் நின்றிருந்தேன் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது, பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி உற்சாகத்துடன் நடனம் ஆடியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.