தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
மீண்டும் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.! லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி.!!
சமீப காலமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், கேபி அன்பழகன் ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்தநிலையில், கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இன்னும் பல நபர்களின் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. இந்த முறை அவர்மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.