"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு மீண்டும் நடைபெறுகிறது! அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி கூறும் தேர்வர்கள்!
தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி நடக்கிறது.
கடந்த ஜூலை 14-ஆம் தேதி நாடு முழுவதும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்பட்டன. தபால் துறையில் நடத்தப்பட்ட தேர்வில் வினாத்தாளில் உள்ள கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் இந்த நடைமுறையை கடுமையாக எதிர்த்தன. தபால் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படும் என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.
இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட தபால் துறை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று தபால் துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வானது ஆங்கிலம் அல்லது அம்மாநில மொழிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.