மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி!

again one dmk mla affected by corona


again one dmk mla affected by corona

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்தநிலையில் ஆரம்பத்திலிருந்து அரசு, தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் ,என பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

dmk mla

இந்நிலையில் குளித்தலை திமுக எம்.எல்.ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திமுக எம்எல்ஏ ராமர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.