சென்னையில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.! மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு.!

சென்னையில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.! மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு.!


again increased corona in tamilnadu

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கல்வி நிறுவனங்களில் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி வளாகம் போன்ற இடங்களில் மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி 22 என இருந்த கொரனோ பாதிப்புகள் தற்போது 100 ஆக பதிவாகி வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

இதன்காரணமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற உத்தரவுகள் கடைபிடிக்கப்படுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.