BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ஆத்தாடி... இனி தாங்காதுப்பா... சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு... வருத்தத்தில் இல்லத்தரசிகள்!!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து அந்நாட்டு மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது.
அதன்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்தது. கடந்த 5 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு 50 ரூபாய் உயர்ந்து 967 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதால் 1,017 ஆக உயர்ந்து காணப்படுகிறது. மேலும் இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரவுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால் இல்லத்தரசிகள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.