தமிழகம் Covid-19

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் அனுமதி.!

Summary:

ADMK minister sellur raju wife corono test positive

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் பெரும்பாலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனாவின் பாதிப்பு பலமடங்கு உயர்ந்துவருகிறது.

கொரோனாவின் வேகத்தால் சாதாரண மக்கள் தொடங்கி, பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், அவர்களின் குடும்பத்தினர் என பலரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். சமீபத்தில் பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுக்கும், அவரது மனைவி, மகன்களுக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதேபோல் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதியானது, திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் கொரோனாவினால் சமீபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அதிமுக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதியானதை அடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement