தமிழகம்

அரிவாளுடன் நீதிபதி இருக்கையில் அமர்ந்த கைதி!. பதறிப்போன வழக்கறிஞர்கள்!. அதிர்ச்சி வீடியோ!.

Summary:

அரிவாளுடன் நீதிபதி இருக்கையில் அமர்ந்த கைதி!. பதறிப்போன வழக்கறிஞர்கள்!. அதிர்ச்சி வீடியோ!.


சிங்கங்கை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்திற்கு முனியசாமி என்பவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.


இரண்டு வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட இவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இருப்பினும் அவர் மீது சில வழக்குகள் உள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால், அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர், ஒவ்வொரு வாரமும் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு அளித்தது.

இந்த நிலையில் நீதிமன்றத்துக்கு வந்த அவர் அங்கு யாரும் இல்லாததை அறிந்து, நீதிமன்றத்தில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் இருந்த அரிவாளை எடுத்து வந்து நீதிபதி இருக்கையில் அமர்ந்துள்ளார்.

அந்த சம்பவத்தை பார்த்த வழக்கறிஞர்கள் பதறிப் போய் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட முனியசாமி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.


Advertisement