கதறி அழுதபடி, ஆக்ரோஷமாக வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை! என்ன கூறியுள்ளார் தெரியுமா.! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

கதறி அழுதபடி, ஆக்ரோஷமாக வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை! என்ன கூறியுள்ளார் தெரியுமா.!

பொள்ளாச்சியில்  20 பேர் கொண்ட காமக் கொடூர கும்பல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி 200 பெண்களிடம் நட்பாக பேசி மடக்கி, அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் அதில் இளம்பெண் ஒருவரை பாலியல் கொடுமை செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதனை கண்ட அனைவரும் இரத்தம் கொடுத்து போனர். மேலும் அந்த கொடூர மிருகங்களுக்கு உடனடியாக தணடனை கொடுக்கவேண்டும் எனவும் குரல் எழுப்பி வந்தனர்.

அதனை தொடர்ந்து  பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார், திருநாவுக்கரசு என்ற குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 
மேலும் இந்த காமக்கொடூரன்களுக்கு எதிராக  திரைபிரபலங்களும், அரசியல் கட்சியினரும், பொது மக்களும், சமூக வலைதளவாசிகளும் கொந்தளித்து வருகின்றனர். 
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையான நிலானி இந்த சம்பவம் குறித்து கதறி அழுத படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo