தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பூ நியமிக்கப்பட்டுள்ளார்..!!
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த குஷ்பு தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து குஷ்பு கூறியதாவது:- தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளேன் மகிழ்ச்சி. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் பெண்களுக்கான சுயமரியாதை இன்மை போன்றவற்றை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.
அந்த வகையில் எனக்கு தற்போது இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் போராடுவோம்.
திமுக நிர்வாகி ஒருவர் பாரதிய ஜனதா கட்சியில் உள்ள பெண்களை குறித்து மிகவும் அவதூறாக பேசியிருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தில் அவர் மீது புகார் கொடுத்தேன்.
அவர் தேசிய மகளிர் ஆணையத்திலேயே மன்னிப்பு கேட்டார் என்று குஷ்பு கூறினார். குஷ்புவுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.