தமிழகம் சினிமா

10 வருடங்களுக்கு முன்பு கேட்கப்பட்ட ஏழை மாணவனின் கனவை நிறைவேற்றி தந்த நடிகர் சூர்யா.. குவியும் பாராட்டுகள்..

Summary:

Actre suriya fulfill the poor students dream

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராகவும் இருந்து வருகிறார். இவர் நடிப்பை தாண்டி பல சமூக உதவிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக இயங்கி வருகிறது சூர்யாவின் அகரம் அறக்கட்டளை.

இந்த அறக்கட்டளையின் மூலம் பல கீழ்த்தர மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைத்துள்ளது. அந்த வகையில் 10 வருடங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் சூர்யா சார்பாக அகரம் மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நந்த குமார் என்பவர் கலந்து கொண்டு இருந்தார்.

அவர் சூர்யாவிடம் நான் பனிரெண்டாம் வகுப்பில் 1160 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். எனக்கு டாக்டர் படிக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால் டாக்டர் படிப்பு படிக்க போதிய பணம் என் தந்தையிடம் இல்லை என கூறி உதவி கேட்டிருந்தார். உடனே சூர்யாவும் தனது அறக்கட்டளையின் மூலம் மருத்துவ படிப்புக்கு ஆகும் செலவு அனைத்தையும் ஏற்று கொண்டு நந்தகுமாரை படிக்க வைத்தார்.

தற்போது நந்தகுமார் படித்து விட்டு மருத்துவராக பணியாற்றி வருகிறார். சூர்யா 10 வருடங்களுக்கு முன்பு சொன்னதை நிறைவேற்றி தந்ததால் தான் நந்தகுமார் மருத்துவராக ஆக முடிந்தது. நடிகர் சூர்யாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். 


Advertisement