இறப்பதற்கு முன் விவேக் நடித்த கடைசி நிகழ்ச்சியின் வீடியோ இதோ!! இணையத்தில் பகிர்ந்த நடிகர் சூர்யா..Actor vivek last show viral video

நடிகர் விவேக் நடித்த கடைசி வெப் சீரிஸின் ப்ரோமோ வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகர் விவேக். தனது திறமையான நடிப்பாலும், பகுத்தறிவான பேச்சாலும் மக்களை கவர்ந்தவர்.  பேரும், புகழோடும் இருந்த நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

விவேக்கின் திடீர் மரணம் சினமா உலகில் பேரதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் நடிகர் விவேக் அவர்கள் இறப்பதற்கு முன் கடைசியாக “LoL- Last of laughing எங்க சிரி பார்ப்போம்” என்ற நிகழ்ச்சியை நடிகர் சிவாவுடன் சேர்ந்து தொகுத்துவழங்கி வந்தார். மேலும் அந்த நிகழ்ச்சியின் நடுவராகவும் விவேக் பங்கேற்றார்.

vivek

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று கடந்த ஏப்ரல் மாதமே இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மற்றொரு ப்ரமோவை நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், "அவர் நம் இதயங்களில் என்றென்றும் வாழ்வார். நடிகர் விவேக் சாரின் கடைசிப் படைப்பை பகிர்ந்து கொள்வது ஒரு கௌரவம். நம்மை சிரிக்க வைத்ததுடன் சமூகப் பொறுப்புள்ள மற்றும் முற்போக்கான எண்ணங்களையும் கூறியவர்” எனவும் சூர்யா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.