நடிகர் விக்ரமை வரவேற்க ஒன்றுகூடிய ரசிகர்கள்.! அடித்து விரட்டிய பாதுகாப்பு படையினர்.!actor vikram fan crowd in trichy

நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கும் கோப்ரா திரைப்படம் வருகிற 31-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தநிலையில், கோப்ரா திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இதற்காக நேற்று நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி உள்பட கோப்ரா திரைப்பட குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த விக்ரம் ரசிகர்கள் நடிகர் விக்ரமை வரவேற்க  திருச்சி விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நடிகர் விக்ரமை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு ஆரவாரம் செய்தனர். அங்கு அதிக அளவில் ரசிகர்கள் திரண்டதால் திருச்சி விமான நிலைய பாதுகாப்பு படையினரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.  பாதுகாப்பு படையினர் ரசிகர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியும் அவர்கள் செல்லவில்லை.

இதனையடுத்து வேறு வழியில்லாமல் பாதுகாப்பு படையினர் நடிகர் விக்ரமின் ரசிகர்களை அடித்து விரட்டினர். பின்னர் ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரீநிதி ரெட்டி மற்றும் படக்குழுவினர் காரில் ஏறி பத்திரமாக சென்றனர். இந்த சம்பவம் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.