நடிகர் ரஜினிகாந்துக்கு பெரும் சோகத்தை தந்த மூத்த ரசிகரின் மரணம்.. கண்ணீர் சோகம்.!

நடிகர் ரஜினிகாந்துக்கு பெரும் சோகத்தை தந்த மூத்த ரசிகரின் மரணம்.. கண்ணீர் சோகம்.!


Actor Rajinikanth Supporter Madurai Muthumani Passed Away

ரஜினிகாந்துக்காக முதன் முதலில் ரசிகர் மன்றம் திறந்த மதுரை ரசிகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

தமிழ் திரையுலகில் 45 வருடங்களை கடத்தும் சூப்பர்ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். ரஜினிகாந்த் சினிமாவில் புகழ்பெற தொடங்கிய காலத்திலேயே, அவருக்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர் மதுரை ரஜினி ரசிகர் ஏ.பி முத்துமணி (வயது 63). 

இவர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 2020 ஆம் வருடம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, ரஜினிகாந்த் முத்துமணிக்கு தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, அவரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தார். 

rajinikanth

இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முத்துமணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்து பல்வேறு நலத்திட்டங்கள் செய்தார். இவரின் திருமணம் ரஜினியின் வீட்டு பூஜையறையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.