ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
லாரி மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து.! 4 பேர் பரிதாப பலி; 26பேர் படுகாயம்!!
திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி நள்ளிரவில் சென்ற அரசு சொகுசு பேருந்து சீர்காழி புறவழிச் சாலையில் பாதரகுடி பகுதிக்கு அருகே சென்று கொண்டு இருந்துள்ளது. அப்பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை சாலையின் இடது புறமாக திருப்ப முயற்சி செய்துள்ளார்.
அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதி நிலைகுலைந்து ஓடி எதிரே வந்த பைக்கில் மோதியுள்ளது. இதில் பைக்கில் வந்த சிதம்பரம் பள்ளிப்படை கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன், அருள்ராஜ், பாலமுருகன் மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் விபத்து குறித்து காவல்துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவலளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் பேருந்து நடத்துனர் விஜயசாரதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மேலும் 11 பேர் மேற் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.