தமிழகம்

சிறையில் கைதிகளின் செயலால் அபிராமியின் தற்போதைய நிலை!.

Summary:

சிறையில் கைதிகளின் செயலால் அபிராமியின் தற்போதைய நிலை!.


சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி என்ற பெண் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது இரு குழந்தைகளை கொன்று கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி செய்தார். அதில் கணவர் தப்பித்து விட்டார். இரு குழந்தைகள் இறந்து விட்டது.

இதனையடுத்து போலீஸார் அபிராமி, சுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சிறையில் அபிராமி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியான நிலையில் அதை அதிகாரிகள் மறுத்தனர்.

சிறையில் தன்னை குடும்பத்தினர் யாரும் சந்திக்க வராததால் அபிராமி மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தான் செய்த தவறை நினைத்து சக கைதிகளிடம் புலம்பி வருகிறாராம் அபிராமி.

அவருக்கு சக கைதிகள் சிலர் ஆறுதல் கூறினாலும் பெரும்பாலான கைதிகள் அவர் மீது வெறுப்பாகவே உள்ளனராம். அபிராமியிடம் முகம் கொடுத்துக்கூட பேசாமல் ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இதனால் பித்துபிடித்ததுப்போல் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் செய்த செயல் சக கைதிகளையும் வெறுப்படையவைத்துள்ளது.


Advertisement