தெரியுமா?? ஆவின் பால் விலை குறைப்பினால் ஆவின் நிறுவனத்துக்கு எத்தனை கோடி நஷ்டமாம் தெரியுமா??aavin-new-rate-updates-and-details

ஆவின் பால் விலை குறைப்பு இன்றில் இருந்து நடைமுறைக்கு வரும்நிலையில், விலை குறைப்பினால் ஆவின் நிறுவனத்துக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றால் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு 3  ரூபாய் வரை குறைக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதன்படி திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று, கடந்த 7 ஆம் தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், 5 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார்.

aavin milk

அதில் ஒன்றுதான் ஆவின் பால் விலை குறைப்பு. அதன்படி இன்று முதல் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ஆவின் பால் 25 லட்சம் லிட்டர்கள் வரை விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும், இந்த விலை குறைப்பு காரணமாக ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வரை ஆவின் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படும் என்று ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.