தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
திருமண ஆசைக்காட்டி மோசம் செய்த இளைஞனால் 17 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு..!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தனது உறவினர் வீட்டு பையனான 22 வயது நிரம்பிய ராம்கி என்ற இளைஞனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியிடம் ராம்கி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார்.
அந்த சிறுமியும் இளைஞன் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி நெங்கி பழகி வந்துள்ளார். இதனை நன்கு பயன்படுத்தி கொண்ட ராம்கி, சிறுமியின் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் எல்லாம் சென்று சிறுமியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி 6 மாத கர்ப்பமாகியுள்ளார். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனை அடுத்து ராம்கி வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோரிடம் சிறுமியின் பெற்றோர் பேசியுள்ளனர்.
ஆனால் ராம்கியின் பெற்றோர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பெண்ணை திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறியதுடன் சிறுமியின் பெற்றோரை தரக்குறைவாக பேசியும் வீட்டை விட்டு அனுப்பியுள்ளனர். இதனை கேட்டு மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ராம்கி என்பவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.