வீடியோ காலில் கணவர் செய்த காரியத்தால் விபரீதம்: பரிதாபமாக பறிபோன இளம்பெண்ணின் உயிர்..!

வீடியோ காலில் கணவர் செய்த காரியத்தால் விபரீதம்: பரிதாபமாக பறிபோன இளம்பெண்ணின் உயிர்..!


A young woman commits suicide in a dispute with her husband

கன்னியாகுமரி மாவட்டம், பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி ஞானபாக்கிய பாய் (32). இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில், சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். ஞானபாக்கிய பாய் கொட்டாரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்ட பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், வெளிநாட்டில் இருக்கு செந்தில் தனது மனைவியிடம்  தினந்தோறும் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசுவது வழக்கம். வழக்கம் போல நேற்று செந்தில் தனது மனைவியுடன் வாட்ஸ்-அப் காலில் பேசியுள்ளார். அப்போது, இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ஜானபாக்கிய பாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் மீண்டும் செந்தில் தனது மனைவிக்கு கால் செய்துள்ளார். நீண்ட நேரமாக அவர் செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்த செந்தில், பக்கத்து வீட்டினருக்கு கால் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார். இதன் பின்னர் பக்கத்து வீட்டினர் செந்தில் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது.

இதன் காரணமாக கதவை உடைத்துச்சென்று உள்ளே பார்த்தபோது, ஞானபாக்கிய பாய் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனையடுத்து அவர்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.