பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
என் முகத்தை பார் ஹிப்னாட்டிசம் மூலமாக நூதனத் திருட்டில் ஈடுபட்ட மந்திரவாதி.!
கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் அவர்களுடைய வீட்டின் பூஜையறையில் சாமி கும்பிட்டபடி இருந்தனர். அப்போது திடீரென்று வீட்டின் வாசலில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. அப்போது வீட்டினுள்ளிருந்து அந்த பெண் எட்டிப் பார்த்தார்.
வீட்டிற்கு வெளியே ஒரு இளைஞன் காவி உடையில் மந்திரவாதியை போல நின்று கொண்டிருந்தான். அப்போது அந்த இளைஞன் தன்னுடைய கையில் எதையோ வைத்துக் கொண்டு, இந்த வீட்டிற்குள் கேட்ட ஆவிகள் உலா வந்து கொண்டிருக்கிறது. அதை விரட்டாவிட்டால் உன்னுடைய கணவன் மரணமடைந்து விடுவார் என்று தெரிவித்துள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண்மணி வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
னாலும் அந்த இளைஞன் மீண்டும், மீண்டும் அந்த வீட்டின் வாசல் முன்பு நின்று கொண்டு அந்த பெண்ணை வெளியே அழைத்துள்ளார். பின்பு கணவன், மனைவி இருவரும் வீட்டிற்கு உள்ளே இருந்தபடி விஷயம் என்ன என்பது பற்றி கேட்டுள்ளனர். அந்த இளைஞன் இருவரையும் வீட்டை விட்டு வெளியே வருமாறு அழைத்ததாக தெரிகிறது.
பின்னர் அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார். அவரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே அந்த இளைஞன் தன்னுடைய முகத்தை பார்க்குமாறு தெரிவித்து, ஹிப்னாடிசம் செய்திருக்கிறார். இதன் காரணமாக, அந்த பெண் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், அந்த இளைஞர் சொன்னபடி தன்னுடைய கையிலிருந்த 2 தங்க மோதிரங்களை கழட்டி கொடுத்திருக்கிறார்.
பின்பு அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு அந்த இளைஞர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்று விட்டார். வெகு நேரம் சென்ற பின்னர் அந்த பெண் சுயநினைவுக்கு வந்து தன்னுடைய கையை பார்த்தபோது அவருடைய கையில் மோதிரமில்லாமலிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அந்தப் பெண்ணின் கணவர் உடனடியாக பீளமேடு காவல்துறையிடம் புகார் வழங்கினார். அந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் ஹிப்னாடிசம் செய்து தங்க மோதிரங்களை நூதன முறையில் திருடி சென்ற மந்திர திருடனை கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, வலை வீசி தேடி வருகிறார்கள்.