பெண்ணை ஓட ஓட விரட்டி கொன்ற காட்டு யானை... வனத்துறையினரின் அலட்சியம்... தொடரும் உயிர்பலி..!

பெண்ணை ஓட ஓட விரட்டி கொன்ற காட்டு யானை... வனத்துறையினரின் அலட்சியம்... தொடரும் உயிர்பலி..!


a-wild-elephant-chased-a-woman-to-run-and-killed-her-in

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு அரசு ரப்பர் தோட்டத்தில் தொழிலாளர்கள் ரப்பர் பால் எடுக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு குட்டி யானையுடன் வந்த பெண் யானை ஒன்று பால் வடிக்கச் சென்ற தொழிலாளர்களை விரட்டியது.

இதனால் அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் எடுத்தனர். இதில் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த பெண் தொழிலாளியான ஞானவதியை அந்த காட்டு யானை விரட்டி மிதித்துக் கொன்றது.

Rubber palntation

மேலும் கடந்த சில நாட்களாகவே அந்தப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் யானைகளை விரட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் யானை மிதித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.