ரயில் நிலையத்தில் திடீரென தடம் புரண்ட ரயில் எஞ்சின்: பரபரப்பான திக் திக் நிமிடங்கள்..!

ரயில் நிலையத்தில் திடீரென தடம் புரண்ட ரயில் எஞ்சின்: பரபரப்பான திக் திக் நிமிடங்கள்..!


A train engine suddenly derailed at a railway station

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்றின் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை வழியாகவும், தஞ்சையில் இருந்தும் சென்னை, திருச்செந்தூர், எர்ணாகுளம், கோயம்புத்தூர், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம், வாரணாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சையில் இருந்து வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சரக்கு ரயில்கள் தஞ்சைக்கு வந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகளை ஏற்றிச்செல்கின்றன. இதே போல் வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை மூட்டைகளும், உரங்களும் தஞ்சைக்கு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு ரயில் நிலையத்தில் உள்ள 7 வது மேடைக்கு சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் என்ஜினின் முன்பக்க சக்கரம் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.

இதனை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள், திருச்சியில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த திருச்சி அதிகாரிகள் தடம் புரண்ட சரக்கு ரயில் என்ஜினை சரி செய்தனர். இதனால் ரயில் நிலைய வளாகத்தில் பரபரப்பு நிலவியது.