திருட்டு சம்பவத்தில் சிக்கிய திருடன். நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு..!



a-thief-caught-in-a-robbery-action-decision-given-by-th

சேந்தமங்கலம் அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியில் வசித்து வருபவர் ராஜா கண்ணன். கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜா கண்ணன்  வெளியில் சென்றிருந்தபோது அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் 3 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

இதனையடுத்து வெளியில் சென்ற ராஜா கண்ணன் வீடு திரும்பிய போது பூட்டி இருந்த வீட்டின் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த நகைகள் அனைத்தும் காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா கண்ணன் காவல்துறைக்கு  தகவல் தெரிவித்துள்ளார்.

robbery

 இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தேனி ஓடப்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கமுத்து என்பவர்தான் ராஜா கண்ணன் வீட்டில் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து தங்கமுத்துவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கானது நேற்று சேந்தமங்கலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி ஹரிஹரன் தங்கமுத்துவிற்கு 6 ஆண்டு சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.