நண்பனை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான வாலிபர்; குடிபோதையில் நடந்த விபரீதம்..!!
நண்பனை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான வாலிபர்; குடிபோதையில் நடந்த விபரீதம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அடவி சாமிபுரம் கிராமம் அருகே கிரஷர் பகுதியில் வெங்கடேசன், மோகன் உள்ளிட்ட ஆறு பேர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மோகன் மோகன் என்பவர் வெங்கடேசனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். உயிருக்கு போராடிய வெங்கடேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
ஆனால், வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
குடிபோதையில் வெங்கடேசனை கத்தியால் குத்திய மோகன் என்பவர் தலைமறைவான நிலையில் கெலமங்கலம் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.