BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
தண்டவாளத்தில் சிறுநீர் கழிக்க சென்ற மாணவன்.. உடல் சிதறி பலியான சம்பவம்..!
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள கஞ்சான் மேட்டுதெருவில் வசித்து வருபவர் ஆசைத்தம்பி. இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளி சென்ற ராகுல் மதிய சாப்பாடு சாப்பிடுவதற்காக பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் ராகுல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியே உள்ள தண்டவாளத்தில் சிறுநீர் கழிப்பதற்காக ராகுல் சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் கோவையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த ஜனசதாப்தி ரயில் தண்டவாளத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த ராகுல் மீது மோதியது. இதில் ராகுல் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் ராகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.