போலீஸ் vs பப்ளிக் கிரிக்கெட் தொடர்: கோவை போலீசாரின் முயற்சிக்கு ஹர்பஜன் சிங் பாராட்டு..!

போலீஸ் vs பப்ளிக் கிரிக்கெட் தொடர்: கோவை போலீசாரின் முயற்சிக்கு ஹர்பஜன் சிங் பாராட்டு..!


a-series-of-cricket-matches-between-police-and-public

கோவை மாநகர காவல்துறையின் சார்பில் வருகிற 24 ஆம் தேதி முதல் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டித் தொடரில் காவல்துறையின் சார்பில் 10 அணிகளும், பொதுமக்கள் சார்பில் 64 அணிகளும் பங்கேற்க உள்ளன. போட்டிகள் வரும் 24 ம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இந்த நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. காவல்துறையினரின் அணிகளுக்கு தனியாகவும், பொதுமக்கள் பங்கேற்கும் அணிகளுக்கு தனியாகவும் போட்டிகள் நடைபெறும். அக்டோபர் 2 ஆம்தேதி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் காவல்துறை மற்றும் பொதுமக்கள் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெறும்.

இந்த நிலையில், அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியை சிறப்பிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஹர்பஜன் சிங், இந்த கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்காக கோவை மாநகர காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், இறுதிப்போட்டிக்கு நேரில் வந்து போட்டியை காணவுள்ளதாக தெரிவித்துள்ளார்.