பழனி பாதயாத்திரைக்கு சென்றவர்களை துரத்தி கடித்த வெறி நாய் ...இருபதுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி...!A rabid dog chased people who went to Palani Padayatra and bit them...More than twenty people were shocked...!

விராலிமலையில் வெறிநாய் கடித்ததால் 20-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, திருச்சி, மணப்பாறை சாலை மற்றும் அம்மன் கோயில் தெரு, சிதம்பரம் கார்டன், முத்து நகர்,சோதனை சாவடி, தெற்கு தெரு போன்ற குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்கள் கடந்த சில நாட்களாக சுற்றித் திரிகின்றன.இது அந்த பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இப்படி சுற்றி திரியும் நாய்கள் அந்த வழியில் பைக்கில் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு  அச்சுறுத்தாலக இருந்து வருகிறது. இந்த நிலையில்  அந்த பகுதியில் சென்று பெண்கள், சிறுவர்கள், பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் என 20-க்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்ததால் அந்த பகுதியில் மக்கள் நடமாட அச்சத்தில் உள்ளனர். 

ஒரே சமயத்தில் நடந்த இந்த சம்பவத்தால் நாய் கடிக்கு உட்பட்டவர்கள் விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்கின்றனர்.