மீன் ஏல தகராறு... சாட்சி சொல்ல வந்தவர் வெட்டிக்கொலை.. வெளியான திடுக்கிடும் உண்மை.!

மீன் ஏல தகராறு... சாட்சி சொல்ல வந்தவர் வெட்டிக்கொலை.. வெளியான திடுக்கிடும் உண்மை.!


a-person-who-was-to-testify-in-nellai-district-was-hack

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே  தளபதி சமுத்திரத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரம் மேலூரை சேர்ந்தவர் அருணாச்சலம்(60). இவர் நேற்று இரவு தனது மகள் முத்துலட்சுமி வீட்டு திண்ணையிலிருந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம  கும்பல் ஒன்று அருணாச்சலத்தை வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்றது.

tamilnadu

இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் " இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தளபதி சமுத்திரம் வேலூர் பெரிய குளத்தில் மீன் ஏலம் எடுப்பது தொடர்பாக விவசாய சங்கத்தினருக்கும் வள்ளியூரை சேர்ந்த முருகன் என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நாங்குநேரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது . இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக அருணாச்சலம் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamilnadu

 இன்று அவர் சாட்சி சொல்ல இருந்த நிலையில்  நேற்று இரவு முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளால்  வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் அருணாச்சலம். இதனைத் தொடர்ந்து ஏர்வாடி போலீசார் தளபதிசமுத்திரம் மேலூரை சேர்ந்த சுரேஷ், செல்வக்குமார் ,முருகன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.