வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!.. புயல் சின்னமாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!.. புயல் சின்னமாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!


A new low pressure area over the Bay of Bengal will strengthen into a cyclonic storm

அந்தமான் தீவின் தெற்கு பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகர்ந்து நாளை மறுநாள் 22 ஆம் தேதி  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால், தமிழகத்தில் 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.