தமிழகம்

"சில்வண்டு சிக்கும், சிறுத்தை சிக்காதும்மோவ்".. தாய் - மகன் பரபரப்பு சேசிங்.. அந்த காலத்தை நினைவூட்டிய வீடியோ.!

Summary:

சில்வண்டு சிக்கும், சிறுத்தை சிக்காதும்மோவ்.. தாய் - மகன் பரபரப்பு சேசிங்.. அந்த காலத்தை நினைவூட்டிய வீடியோ.!

அன்புள்ளம் கொண்ட தாய் மகனை விரட்ட, பயத்தின் உச்சத்தில் மகன் தாய் மீது கல்லெறிந்து தப்பியோட, சிறுவயதில் நடந்த நினைவுகள் ஒன்றை வீடியோவால் வந்து செல்கிறது.

1970, 1980, 1990, 1999 வரையிலான காலம் வரை நமது தாய்மார்களும் - தந்தைமார்களும் பள்ளிக்கூடத்திற்கு நம்மை அனுப்பி வைக்க பலகட்ட போராட்டத்தை நடத்தியிருப்பார்கள். அதனால் நமக்கு முதுகில் கிடைத்த பரிசும் பல. பள்ளிகள் என்றாலே வெறுப்பு என்ற நிலையில், அன்றைய மாணவர்களால் அது புறக்கணிக்கப்பட்டது. 

பள்ளிகளில் மதிய உணவு திட்டம் அறிமுகம் செய்ததும், வறுமையால் வாடிய குடும்பத்தினர் பள்ளிக்கு சென்றால் பிள்ளைகளாவது சாப்பிடுவார்கள் என்ற எண்ணத்திலும் அனுப்பி வைத்தனர். அந்த வறுமையிலும் படித்து முன்னேறிய பலரும் இருக்கிறார்கள். அந்த காலங்கள் நமது நினைவில் மட்டுமே இருப்பவை. கோடி ரூபாய் கொடுத்தாலும் அக்கால நினைவுகளை மீண்டும் செயல்படுத்த முடியாது என்பதே நிதர்சனம். 

இன்றுள்ள காலத்திலும் பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகள் குறைந்தளவில் இருந்து வருகிறார்கள். ஏதேனும் ஒரு தவறு செய்தால் வீட்டில் முதுகை தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டுவிடுவேன் என மிரட்டி இருப்பார்கள். காலத்தின் வளர்ச்சிக்கேற்ப, நமது நினைவுகளை மீண்டும் தோற்றுவிக்கும் வகையில் தாய் - மகன் இடையே நடக்கும் பள்ளிச்சண்டை குறித்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், தாயொருவர் தனது மகனை அடிக்க கட்டையை தூக்கியபடி விரட்ட, அந்த மகனோ தாயை நோக்கி கல்லை எறிந்துவிட்டு மீண்டும் ஓட்டம் எடுக்கிறார். இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை. ஆனால், பருவகால நினைவுகளை பலருக்கும் ஏற்படுத்திவிட்டது. அப்பாக்கு பயந்து அம்மாவிடம் அடைக்கலம் செல்வது, அப்பா - அம்மாவுக்கு பயந்து தாத்தா வீட்டுக்கு ஓடுவது என சிறுவயதில் நாம் செய்த குறும்பு சேட்டைகள் சில நேரங்களில் கண்முன்னே வந்துசெல்கிறது. 


Advertisement