புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
காதலியை அந்தரங்க போட்டோ, வீடியோ எடுத்து மிரட்டல்.! பணம் பறிக்கும் முயற்சிக்கு கிடைத்த பரிசு கை விலங்கு.!
கள்ளக்குறிச்சியில் இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் உல்லாசமாக இருந்தபோது அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்துள்ளார். அவற்றை வைத்து தற்போது மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் இருக்கும் என்.ஜி.ஜி.ஓ நகரில் வசிப்பவர் பாஸ்கரன். இவரது மகன் பிரவீன் குமார் (26) அதே பகுதியில் வசிக்கும் 19 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார்.
இருவரும் ஒன்றாக அடிக்கடி வெளியில் சுற்றி வந்தனர். அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். உல்லாசமாக இருக்கும் வேளையில் தனது காதலிக்குக் தெரியாமல் அதனை வீடியோ எடுத்தும், புகைப்படம் எடுத்தும் வைத்துள்ளார்.
தான் விரும்பும் வேளையில் எல்லாம் உல்லாசத்திற்கு வர சொல்லி தனது காதலியை கட்டாயப்படுத்தியுள்ளார். அந்தப் பெண் அதற்கு மறுத்த நிலையில், தான் எடுத்த அந்தரங்க புகைப்படங்களையும், வீடியோக்களையும் அந்த பெண்ணுக்கு அனுப்பி மிரட்டி உள்ளார்.
மேலும் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் இது குறித்து புகார் அளித்தார். தற்போது பிரவீன் குமாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.