அடக்கடவுளே மறுபடியுமா !! வங்கக்கடலில் உருவானது குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதி..! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...

அடக்கடவுளே மறுபடியுமா !! வங்கக்கடலில் உருவானது குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதி..! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...


a-low-pressure-area-formed-in-the-bay-of-bengal

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய சென்னை வானிலை ஆய்வு மையத்  தலைவர் பாலச்சந்திரன் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெற உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது சற்று வலுப்பெற்று வட மேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுவையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்தார்.இதன் காரணமாக இன்றும, நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

tamilnadu
சென்னையை பொறுத்தவரையில் வருகின்ற 11 மற்றும் 12-ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுவடைய வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது