பெரும் சோகம்..அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பலி.!

பெரும் சோகம்..அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பலி.!


A great tragedy..a woman who stepped on a downed power line was electrocuted and thrown away.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் குப்பன் - சரசு தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்கள். 

இதனையடுத்து சம்பவத்தன்று சரசு வழக்கம் போல் காலை தோட்ட வேலைக்காக தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் தொடர்ந்து பெய்த மழையில் மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. இதனை கவனிக்காத சரசு அந்த வழியில் கடக்கும் போது அறுந்து கிடந்த கம்பியை காலால் மிதித்துள்ளார்.

electric shock

இதில் மின்சாரம் சரசு மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதற்கிடையில் சரசு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது கணவன் குப்பன் அவரை தேடி சென்றுள்ளார். அப்போது அவர்களது விவசாய நிலத்தில் சரசு மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த திருவண்ணாமலை காவல் துறையினர் சரசுவின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.