அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
மீன் வியாபாரம் பார்க்குறது குத்தமா?.. அரசு பேருந்து நடத்துனரின் சர்ச்சை செயல்..!
குளச்சலில் மீன் விற்பனை செய்துவரும் மூதாட்டி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சர்ச்சை சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இந்த மூதாட்டி மீன் விற்பனை செய்து விட்டு, வாணியக்குடி செல்வதற்கு அரசுப் பேருந்தில் ஏறி இருக்கிறார்.
இதன்போது, மூதாட்டி மீன் விற்பனை செய்து வந்த பாத்திரத்தையும் உடன் வைத்துள்ளார். இதனைகவனித்த பேருந்தின் நடத்துனர், மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி, பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளார்.

இதனால் பெரும் ஆத்திரத்திற்கு உள்ளான மூதாட்டி, பேருந்து நிலையத்தில் கத்திக் கூச்சலிட்டு தனக்கான நியாயத்தைக் கேட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, பேருந்து நடத்துநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.