தமிழகம் காதல் – உறவுகள்

சாணிப்பொடியை குடித்து பெண் எடுத்த விபரீத முடிவு, வெளியான அதிர்ச்சி காரணம் , கதறிய பெற்றோர்கள் .!

Summary:

சாணிப்பொடியை குடித்து பெண் எடுத்த விபரீத முடிவு, வெளியான அதிர்ச்சி காரணம் , கதறிய பெற்றோர்கள் .!


கோயம்புத்தூர் கோவில்பாளையம் காளியம்மன்கோவில் தெருவைச் சார்ந்தவர் ஜெகவீரபாண்டியன். மென்பொருள் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜென்சி வயது . 

இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று ஜென்சி மர்மமான முறையில் திடீரென இறந்து விட்டார்.

இந்நிலையில் ஜென்சியின் இறப்பில் ஏதோ மர்மம் இருப்பதாக கூறி ஜென்சியின் தாயார் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில் எனது மகளும், ஜெகவீரபாண்டியனும் கடந்த ஒரு வருடம் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் மாப்பிளை விட்டார் வரதட்சணை கேட்டு எனது மகளை கொடுமை படுத்தினர். இதனால் அவர்களுக்கு  செய்ய வேண்டிய நகையை முறைப்படி அவர்களுக்கு செய்தோம்.

தொடர்புடைய படம்

இந்நிலையில் சமீபத்தில் என்னை தொடர்பு கொண்டு அவரது வீட்டில் எனக்கு சாப்பாடு, தண்ணீர் தராமல் பணம் மற்றும் நகை கேட்டு அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நான் எனது மகளுக்கு தொடர்பு கொண்டபோது அவள் சோகமாக பேசினார்., அதை பற்றி கேட்டதற்கு அவர் ஒன்றும் கூறாமல் அமைதிகாத்தார். 

   நள்ளிரவில் என்னை தொடர்பு கொண்ட ஜென்சியின் கணவர் தங்கள் மகள் சாணிப்பொடியை குடித்துவிட்டதாகவும், அவரை மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

கணவர் வீட்டினர் எனது மகளை வரதட்சணை கொடுமை செய்துள்ளதாகவும், அவர்களே ஏன் மகளை ஏதோ செய்துவிட்டனர் எனவும்  கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புள்ள அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement