அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
மாடு மேய்த்த பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரம்!.. பரபரப்பான கிராமம்..!
பொள்ளாச்சி அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருக்கும் சீலக்காம்பட்டியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (50). இவரது மனைவி நாகவேணி (45). இவர் தினமும் தனது வீட்டில் உள்ள மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று பிற்பகலில் வீடு திரும்புவார். வழக்கப்படி, நேற்று நாகவேணி கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் இருக்கும் புதுப்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்ற நாகவேணி வீடு திரும்பவில்லை.
மாலையில் மாடுகள் வீட்டிற்கு திரும்பி வந்த பிறகும், நாகவேணி வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடி சென்றனர். அப்போது, புதுப்பாளையத்தில் உள்ள முட்புதரில் நாகவேணி நிர்வாணமாக உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், கோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மற்றும் கோமங்கலம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, நாகவேணியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் நாகவேணி இறந்த பகுதி திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்டது என்பது தெரிய வந்ததால், இந்த கொலை சம்பவத்தை திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.