கோபத்தில் ரயில் முன் பாய்ந்து சிறுவன் தற்கொலை: விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!

கோபத்தில் ரயில் முன் பாய்ந்து சிறுவன் தற்கொலை: விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!


A boy commits suicide by jumping in front of a train in anger

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் அருகே முன்னீர் பள்ளம் பகுதியில் உள்ள மருதம் நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவரது 2 வது மகன் சதீஷ் (16). இவர் பாளை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை அதே பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே சென்ற சதீஷ், அந்த வழியாக சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் நாகர்கோவில் ரயில்வே காவலதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து நாகர்கோவில் ரயில்வே காவல் துணை ஆய்வாளர் குமார்ராஜ் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் சதீஷ் அதிகமாக செல்ஃபோன் பயன்படுத்தி வந்ததாகவும், இதன் காரணமாக அவரது தாயார் சதீஷூடம் இருந்த செல்ஃபோனை பிடுங்கி மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது.